Sbs Tamil - Sbs

  • Autor: Vários
  • Narrador: Vários
  • Editora: Podcast
  • Duração: 63:23:10
  • Mais informações

Informações:

Sinopse

Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !

Episódios

  • இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் அண்மைய நாட்களில் இடம்பெற்ற முக்கிய செய்திகளின் பின்னணி

    04/11/2024 Duração: 08min

    இந்தியா கனடா இடையே மிக மோசமான உறவு நிலவி வரும் நிலையில், கனடாவில் உள்ள இந்தியத் தூதர்களை அந்நாட்டு அரசு கண்காணிப்பதாக இந்திய அரசின் குற்றச்சாட்டு மற்றும் திமுக கூட்டணியில் சிக்கலை உருவாக்கும் தமிழக வெற்றிக் கழகம் போன்ற செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்

  • அமெரிக்க அதிபர் தேர்தல்: யார் வென்றார் என்பது எப்போது தெரியும்?

    04/11/2024 Duração: 10min

    அமெரிக்காவில் நடக்கவிருக்கும் தேர்தல் குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

  • சர்வதேச மாணவர்கள் கடற்கரையில் பாதுகாப்பாக இருக்க புதிய திட்டங்கள்

    04/11/2024 Duração: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 04/11/2024) செய்தி.

  • ஏன் தைவானை இழக்க அமெரிக்காவும், சீனாவும் தயாரில்லை? அப்படி தைவானில் என்ன இருக்கிறது?

    02/11/2024 Duração: 10min

    ஏன் தைவானை இழக்க மேற்கு தயாரில்லை? சைனாவும் விடுவதாகயில்லை? அதற்கான காரணங்களை விளக்குகிறார் பல ஆண்டுகளாக ஊடகத்துறையில் பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

  • இந்த வார முக்கிய செய்திகள்

    02/11/2024 Duração: 04min

    இந்த வார முக்கிய செய்திகள்: 2 நவம்பர் 2024 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல்

  • இலங்கையின் இந்த வார முக்கிய செய்திகள்

    01/11/2024 Duração: 08min

    நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு எதிர்வரும் 14ம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் தேர்தல் பிரச்சார பணிகள் தீவிரம் பெற்றுள்ளன. இந்த நிலையில் தேர்தல் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன; இந்திய - இலங்கை மீனவர் பிரச்சினை தொடர்பான 6வது சுற்று பேச்சுவார்த்தை கொழும்பில் இடம்பெற்றுள்ளது. இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

  • பிரதமர் சலுகை பெற்றது சரியா இல்லையா?

    01/11/2024 Duração: 11min

    பத்திரிகையாளர் Joe Aston எழுதி அண்மையில் வெளியாகியுள்ள “The Chairman's Lounge” என்ற நூலில் பிரதமர் Anthony Albanese, அப்போதைய Qantas நிர்வாக அதிகாரியான Alan Joyceஐ தொடர்பு கொண்டு தனது விமானப் பயணத்தில் இருக்கை மேம்பாடு வேண்டுமென்று கோரிக்கை முன் வைத்ததாக எழுதியுள்ளார்.

  • கோரப்படாத பல மில்லியன் Medicare கட்டணங்களில் உங்கள் பணமும் உள்ளதா?

    01/11/2024 Duração: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 01/11/2024) செய்தி.

  • பெர்த் தீபவாளி: நம்மவர்கள் நம்முடன்

    01/11/2024 Duração: 08min

    மேற்கு ஆஸ்திரேலிய தலைநகர் பெர்த் நகரில் கடந்த சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 26 & 27) ஆகிய நாட்களில் தீபாவளி திருவிழா நடைபெற்றது. அவ்வேளையில் SBS தமிழ் ஒலிபரப்பின் நிறைவேற்றுத் தயாரிப்பாளர் றைசெல் சில சமூக தலைவர்களை சந்தித்து உரையாடினார். அந்த பதிவுகளின் தொகுப்பு.

  • What happens when you are summoned for Jury Duty? - Jury சேவை என்பது என்ன? இதற்கு யாரெல்லாம் அழைக்கப்படலாம்?

    31/10/2024 Duração: 09min

    Every Australian citizen who is on the electoral roll can be called up for jury service. But what is involved if you get called to be a juror? And what is the role of a jury? - Jury- நீதிமன்றத்தில் ஒரு குற்றம்பற்றிய உண்மைகளைக் கேட்டறிந்து ஒருவர் குற்றவாளியா நிரபராதியா என்பதை முடிவுசெய்யும் பொதுமக்கள் சார்ந்த குழுவில் பணியாற்றுவதற்கு நீங்கள் அழைக்கப்பட்டால் என்ன செய்வது என்பது தொடர்பில் Chiara Pazzano ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • இலக்கியங்களில் தீபாவளி கூறும் கதைகளும், காரணங்களும்

    31/10/2024 Duração: 10min

    தீபவாளி குறித்த பல கதைகளையும், காரணங்களையும் இலக்கிய சொல்லாடலுடன் முன்வைக்கிறார் மா.கி.ரமணன் அவர்கள்.

  • அமெரிக்க விருது வென்ற தமிழ் மீனவப் பெண்

    31/10/2024 Duração: 11min

    பாடசாலைக்குச் சென்று அதிகம் கற்காவிட்டாலும், கடலில் இருந்து தொடர்ச்சியாகப் பாசி எடுத்தால் அந்த வளம் அழிந்து போகும் என்று அறிந்தது மட்டுமல்ல அதனை சக கிராமத்தவருக்கும் எடுத்துச் சொல்லி, தனது சூழலைப் பாதுகாக்க உழைக்கும் லக்‌ஷ்மி மூர்த்தி அவர்களுக்கு அமெரிக்காவிலிருந்து இயங்கும் Seacology என்ற அமைப்பு 2015ஆம் ஆண்டிற்கான விருதை வழங்கி கௌரவித்திருந்தது.

  • ‘ஆஸ்திரேலியாவின் புதிய தொழில்நுட்பம்’ – இந்தியாவின் மாசு பிரச்சினையை தீர்க்க உதவுமா?

    31/10/2024 Duração: 06min

    நீர்நிலைகளில் சிந்தியுள்ள எண்ணெயைப் பிரித்து எடுத்து சுத்தம் செய்யக்கூடிய தொழில்நுட்பம் ஒன்றை ஆஸ்திரேலிய நிறுவனம் ஒன்று உருவாக்கிவுள்ளது. இதனை கொண்டு இந்தியாவின் மாசு பிரச்சனையை தீர்க்கும் பணியில் இந்நிறுவனம் ஈடுப்பட்டுள்ளது. இது குறித்து ஆங்கிலத்தில் Cameron Carr எழுதிய விவரணத்தை தமிழில் தயாரித்து வழங்குகிறார் செல்வி.

  • ஆஸ்திரேலியா கடுமையான காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் - CSIRO & Bureau of Meteorology

    31/10/2024 Duração: 04min

    செய்திகள்: 31 அக்டோபர் 2024 வியாழக்கிழமை வாசித்தவர்: றைசெல்

  • மெல்பன் பாடசாலை ஒன்றில் கார் மோதியதில் மாணவர் பலி - முழு விவரம்

    31/10/2024 Duração: 06min

    மெல்பன் கிழக்கு Hawthorn East புறநகரில் உள்ள Auburn South Primary பாடசாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் 11 வயதான மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரோடு இருந்த மேலும் நான்கு மாணவர்கள் காயமடைந்துள்ளனர். மெல்பன் Hawthorn East புறநகர் சமூகத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ள இந்த விபத்து சம்பவம் குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.

  • மெல்பன் பெண் நிக்கிதா கொலை- காதலன் கைது: பிந்திய தகவல்கள்

    30/10/2024 Duração: 02min

    மெல்பன் பெண் நிக்கிதாவை கொலை செய்ததாக அவரது காதலன் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், அவர் மருத்துவமனையில் இருப்பதால் அவரது முதல் நீதிமன்ற விசாரணைக்கு முன்னிலையாகவில்லை என வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • நடிகர் விஜய் நடத்திய மாநாடு சொல்லும் செய்தி என்ன?

    30/10/2024 Duração: 10min

    நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடந்து முடிந்திருக்கிறது. விஜயின் அரசியல் வருகை தொடர்பான ஒரு விரிவான தொகுப்பை முன்வைத்திருக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.

  • இந்தியர்களுக்கான work and holiday விசா-நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை

    30/10/2024 Duração: 10min

    ஆஸ்திரேலியா இந்தியர்களுக்கு ஆயிரம் work and holiday விசாக்களை இந்த ஆண்டு வழங்க உள்ளது. அதற்கான விண்ணப்பங்கள் அக்டோபர் 01 முதல் அக்டோபர் 31 வரை பெறப்பட்டுவருகிறது. விண்ணப்ப தேதி முடிவடைந்ததன் பின்னரான நடைமுறைகள் உட்பட இந்த விசா தொடர்பிலான முக்கிய அம்சங்களை விளக்குகிறார் சிட்னியில் குடிவரவு முகவராக பணியாற்றும் திருவேங்கடம் ஆறுமுகம் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • 3G வலையமைப்பு மூடுதல் : யாரெல்லாம் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்?

    29/10/2024 Duração: 06min

    Telstra மற்றும் Optus தங்களின் 3G வலையமைப்பின் இயக்கத்தை அக்டோபர் 28-ஆம் தேதி கடந்த திங்கட்கிழமை முதல் நிறுத்தியுள்ளது. இதனால் பெரும்பாலும் பிராந்திய மற்றும் கிராமப்புற மக்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள் என்று கருதப்படுகிறது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.

  • மோசடி அறிவோம்: “வீட்டிலிருந்துகொண்டே இரண்டாவது வேலை செய்யலாம்; பணம் சம்பாதிக்கலாம்”

    29/10/2024 Duração: 12min

    நிதி நெருக்கடியில் பலரும் சிக்கி தவிக்கும்போது வீட்டிலிருந்துகொண்டே, ஓய்வாக இருக்கும் நேரங்களில், எளிதாக இரண்டாவது வேலை செய்யலாம் என்ற விளம்பரங்கள், குறுஞ்செய்திகள் பலரை கவரக்கூடும். அதிலுள்ள அபாயங்களை விளக்குகிறார் இணைய பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றுகின்றவரும், இணைய மோசடி குறித்து முனைவர் பட்டத்திற்காக ஆய்வு மேற்கொண்டுவருபவருமான செந்தில் சிதம்பரநாதன் அவர்கள். Cyber Awareness Week கடைபிடிக்கப்படும் பின்னணியில் செந்திலோடு உரையாடுகிறார் றைசெல். இணைய பாதுகாப்பு குறித்த தொடரின் இரண்டாம் பாகம்.

página 4 de 25