Sbs Tamil - Sbs

  • Autor: Vários
  • Narrador: Vários
  • Editora: Podcast
  • Duração: 229:22:53
  • Mais informações

Informações:

Sinopse

Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !

Episódios

  • போலி நோட்டுகள் குறித்து ஆஸ்திரேலியர்களுக்கு எச்சரிக்கை-புதிய சோதனை நடவடிக்கையும் ஆரம்பம்

    14/04/2026 Duração: 02min

    ஆஸ்திரேலியாவில் போலி நோட்டுகளின் புழக்கம் அதிகரித்து வருவதால், அதிகாரிகளும் வணிக நிறுவனங்களும் அதிக எச்சரிக்கையுடன் உள்ளனர்.இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • செய்தியின் பின்னணி: ஈரான் துறைமுகங்கள் மீதான அமெரிக்க முற்றுகை ஆரம்பம்- அடுத்தது என்ன?

    14/04/2026 Duração: 07min

    உலகின் முக்கியமான கடல் வர்த்தக பாதைகளில் ஒன்றான ஹோர்முஸ் நீரிணையை முடக்கும் அமெரிக்காவின் கடற்படை முற்றுகை நடைமுறைக்கு வந்துள்ளது. இது குறித்து SBS News-க்காக ஆங்கிலத்தில் Camille Bianchi எழுதிய விவரணத்தை அடிப்படையாக கொண்டு செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் றேனுகா துரைசிங்கம்

  • ஆஸ்திரேலியாவில் வீட்டு விலை எங்கே குறைகிறது? எங்கே அதிகரிக்கிறது?

    14/04/2026 Duração: 02min

    ஆஸ்திரேலியாவின் வீட்டு விலை தொடர்பில் தற்போது கலவையான நிலை உருவாகியுள்ளதுடன், வளர்ச்சி வேகம் மந்தமடையும் அறிகுறிகள் தென்படுகின்றன. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • இன்றைய செய்திகள்: 14 ஏப்ரல் 2026 - செவ்வாய்க்கிழமை

    13/04/2026 Duração: 03min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 14/04/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.

  • மெல்பன் தமிழ் சந்தை: வணிகமும் கலாச்சாரமும் இணையும் பெருவிழா!

    13/04/2026 Duração: 10min

    Australian Tamil Chamber of Commerce - Victorian Chapter ஏற்பாட்டில் 'மெல்பன் தமிழ் சந்தை' விரைவில் நடைபெறவுள்ளது. இதுதொடர்பில் அந்த அமைப்பைச் சேர்ந்த செந்தில் வேல்-Executive Vice President மற்றும் திருமலை செல்வி சண்முகம்-Vice President of Membership ஆகியோரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • மின்சார மிதிவண்டிகள் (e-Bikes) வரமா சாபமா?

    13/04/2026 Duração: 10min

    நம் நாட்டின் சாலைகளில் மின்சார மிதிவண்டிகள் – e-Bikeகளின் பாவனை மிக வேகமாக வளர்ந்து வருகிறது. மத்திய கிழக்கில் ஏற்பட்டிருக்கும் போர், எரிபொருள் விலை மீது நேரடித்தாக்கம் செலுத்துகிறது. அதிகரித்துவரும் வாழ்க்கைச் செலவைக் குறைப்பதற்கு ஒரு வழியாக, மக்கள் வாகனங்களை ஓட்டுவதை விடுத்து மின்மிதிவண்டிகளைப் பயன்படுத்துகிறார்கள். அதிகரிக்கும் e-Bikeகள் சாலைப் பாதுகாப்பில் ஏற்படுத்தும் தாக்கம் என்ன, இந்த மின்மிதிவண்டி ஓட்டுனர்கள் மட்டுமல்ல, வாகன ஓட்டுனர்களும் எவற்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று Supreme Car Learners என்ற அமைப்பை நிறுவி, பல வருடங்களாக வாகனங்களை சரியான முறையில் ஓட்டுவதற்குக் கற்றுக் கொடுத்துவரும் சிவகுருநாதன் சிறீக்குமார் அவர்களுடன் கேட்டறிந்து கொள்கிறார் குலசேகரம் சஞ்சயன்.

  • செய்தியின் பின்னணி: அமெரிக்கா – ஈரான் சமாதானப் பேச்சுவார்த்தைகள் - உடன்பாடு ?

    13/04/2026 Duração: 09min

    பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான, இருபத்தொரு மணி நேரம் நீடித்த, பேச்சுவார்த்தைகள் எந்த உடன்பாடும் இல்லாமல் முடிவடைந்துள்ளன. எரிபொருள் பற்றாக்குறை மற்றும் உயரும் வட்டி விகிதங்களை ஏற்கனவே எதிர்கொண்டிருக்கும் ஆஸ்திரேலியர்களுக்கு இது மிகவும் விரும்பத்தகாத செய்தி. இந்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

  • இன்றைய செய்திகள்: 13 ஏப்ரல் 2026 - திங்கட்கிழமை

    13/04/2026 Duração: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 13/04/2026) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.

  • ‘திராவிட முன்னேற்றக் கழகம் சவாலை சமாளிக்கும், களத்தில் வெல்லும்’ - பேராசிரியர் ரவீந்திரன்

    12/04/2026 Duração: 11min

    தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த பின்னணியில் திமுகவின் வெற்றிவாய்ப்பு குறித்து கலந்துரையாடுகிறார் அண்மையில், திமுகவின் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.

  • இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (5 – 11 ஏப்ரல் 2026)

    11/04/2026 Duração: 05min

    ஆஸ்திரேலியாவில் இந்த வாரம் (5 – 11 ஏப்ரல் 2026) நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: றைசெல்.

  • தீ அபாயம்: ஆயிரக்கணக்கான வாகனங்களை திரும்பப்பெறும் Hyundai

    10/04/2026 Duração: 02min

    Hyundai நிறுவனம் ஆஸ்திரேலியாவில் சுமார் 5,000 மின் வாகனங்களுக்கு recall-திரும்பப்பெறுதல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • Chasing Dreams in Baggy Green: Nitesh Samuel’s Cricket Journey - ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்த தமிழனின் கதை

    10/04/2026 Duração: 17min

    Nitesh Samuel is a rising Australian U19 opening batsman from NSW, known for his heavy run-scoring in national championships and selection for the 2026 U19 World Cup. With strong technique and temperament, he’s considered one of the promising young players coming through Australia’s cricket system. Nitesh shares his experience and future goals with Praba Maheswaran. - ஆஸ்திரேலியா Under-19, உலகக்கோப்பை அணிக்காக விளையாடிய தமிழ் கிரிக்கெட் வீரர் நிதேஷ் சாமுவேல் அவர்கள் எமக்கு வழங்கிய நேர்காணல். அவரது கிரிக்கெட் பயணமும், இதுவரை பெற்ற அனுபவங்களும், எதிர்காலக் கனவுகளும் குறித்து அவர் எம்முடன் பகிர்ந்துகொண்டார். அத்துடன் நிதேஷின் தந்தை லால் சாமுவேல் அவர்களும் கிரிக்கெட் விளையாட்டிலான தனது ஈடுபாடு பற்றியும் தனது இரு மகன்களினது சாதனைகள் பற்றியும் பெருமையுடன் சில வார்த்தைகள் கூறினார். அவர்களிருவருடனும் உரையாடியவர் மகேஸ்வரன் பிரபாகரன்.

  • செய்தியின் பின்னணி: ஆப்கான் போர்க் குற்றங்கள் - ஆஸ்திரேலியாவின் வேறுபட்ட அணுகுமுறை

    10/04/2026 Duração: 06min

    ஆப்கானிஸ்தானில் நடந்ததாக கூறப்படும் போர் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் முறையில், ஆஸ்திரேலியாவின் அணுகுமுறை அதன் முக்கிய கூட்டாளிகளிலிருந்து வேறுபட்டதாக நிபுணர்கள் கூறுகின்றனர். நாட்டின் மிக உயர்ந்த விருதுகள் பெற்ற முன்னாள் வீரர் பென் ராபர்ட்ஸ்-ஸ்மித் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டிருப்பது, இந்த விசாரணைகளில் ஒரு முக்கிய முன்னேற்றமாகவும், ஆஸ்திரேலியாவின் தனித்துவமான தன்மையை வெளிப்படுத்துவதாகவும் பார்க்கப்படுகிறது. இதுபற்றிய செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

  • இன்றைய செய்திகள்: 10 ஏப்ரல் 2026 - வெள்ளிக்கிழமை

    10/04/2026 Duração: 05min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 10/04/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.

  • தமிழ்நாட்டில் தந்தை & மகன் கொலை வழக்கில் 9 காவலர்களுக்கு தூக்குத் தண்டனை!

    09/04/2026 Duração: 08min

    தமிழகத்தை உலுக்கிய சாத்தான்குளம் தந்தை & மகன் காவல் நிலைய படுகொலை வழக்கில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட 9 காவலர்களுக்கும் இரட்டை தூக்குத்தண்டனை என்று மதுரை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.

  • ஆஸ்திரேலிய விசா விண்ணப்பத்தில் இழைத்த தவறினால் நாடுகடத்தலை எதிர்கொண்டுள்ள பெண்

    09/04/2026 Duração: 02min

    தெற்கு ஆஸ்திரேலியாவில் வாழ்ந்துவரும் பெண் ஒருவர் விசா விண்ணப்பம் தொடர்பில் இழைத்த தவறொன்றினால் தற்போது ஆஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தலை எதிர்கொண்டுள்ளார். இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • ஆஸ்திரேலியா அறிவோம்: நமது விளையாட்டு அணிகளின் செல்லப்பெயர்கள் தெரியுமா?

    09/04/2026 Duração: 09min

    ஆஸ்திரேலியா விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாடு. விளையாட்டு என்பது மக்களின் பண்பாட்டுக் கூறுகளில் கலந்த ஒன்று. ஆஸ்திரேலியாவின் பல விளையாட்டு அணிகள் நமக்கு தெரியும். ஆனால் இந்த விளையாட்டு அணிகளுக்கு தரப்பட்டிருக்கும் செல்லப்பெயர்கள் தெரியுமா? “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சிவழி விவரிக்கிறார் கீதா மதிவாணன் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.

  • மொபைல் பேசியதால் சிறுவன் உயிரிழப்பு! தண்டனை போதுமானதல்ல என்கிறது குடும்பம்

    09/04/2026 Duração: 05min

    Bryson Dimovski என்ற 14 வயது சிறுவன் உயிரிழக்க காரணமான ஓட்டுநருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, நீதிமன்றம் அளித்த இந்தத் தீர்ப்பு Bryson Dimovski குடும்பத்தை மிகுந்த ஆத்திரத்திற்குள்ளாக்கியுள்ளது. இந்த விபத்து குறித்தும், நடைபெற்ற விசாரணை, அளிக்கப்பட்ட தீர்ப்பு என்றும் பல அம்சங்கள் குறித்தும் விளக்குகிறார் உயிர்மெய்யார்.

  • நீங்கள் முதுகுவலியால் அவதிப்படுகிறீர்களா?

    09/04/2026 Duração: 07min

    முதுகுவலி என்பது நம்மை அடிக்கடி பாதிக்கும் ஒரு பிரச்சினையகும். இது குறித்த பல கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார் எலும்பு முறிவு சத்திரசிகிச்சை நிபுணர் கனகரட்ணம் காண்டீபன் அவர்கள். அவருடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம். இந்நிகழ்ச்சி ஒரு மறுஒலிபரப்பு.

  • மன்னார் மண்ணில் ஆஸ்திரேலிய நிறுவனத்தின் தேடல் சர்ச்சையாகிறது

    09/04/2026 Duração: 15min

    இலங்கையின் வடமேற்குப் பகுதியிலுள்ள மன்னார் தீவிலிருந்து ஆஸ்திரேலிய நிறுவனம் ஒன்று இல்மனைட் மணலைத் தோண்டியெடுக்கத் திட்டமிடுகிறது. இது குறித்து Bridging Lanka என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் தலைமை இயக்குனர் Jeremy Ahamed Liyanage மற்றும் அதில் பணியாற்றும் றோஜன் ஆகியோரது கருத்துகளுடன் 2020ஆம் ஆண்டில் குலசேகரம் சஞ்சயன் படைத்த விவரணம் இது. இல்மனைட் சுரங்கங்கள் மன்னார் தீவில் அமைக்கப்படுவது குறித்து இலங்கை அரசின் நிலைப்பாடு என்ன என்று அறிந்து கொள்ள, சுரங்கங்களுக்கு அனுமதி வழங்கும் Geological Survey & Mines Bureau – புவிச் சரிதவியல் அளவை சுரங்கப் பணியகத்தையும் Central Environmental Authority என்ற மத்திய சுற்றாடல் அதிகாரசபையையும் பலமுறை தொடர்பு கொண்டோம். அவர்களிடமிருந்து எந்தப்பதிலும் எமக்குக் கிடைக்கவில்லை. 2020ஆம் ஆண்டு ஒலிபரப்பான நிகழ்ச்சியின் மறு ஒலிபரப்பு இது.

página 1 de 90