Informações:
Sinopse
Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !
Episódios
-
Rumours, Racism and the Referendum - SBS Examines : வதந்திகள், இனவாதம் மற்றும் வாக்கெடுப்பு
23/10/2024 Duração: 07minMisinformation and disinformation were rife during the referendum. The effects are still being felt a year on. - Voice to Parliament என்ற கட்டமைப்பு குறித்த மக்கள் கருத்து வாக்கெடுப்பு தோல்வியடைந்து இப்போது, ஒரு வருடத்திற்குப் பிறகு பொய்யான மற்றும் தவறான தகவல் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தியது என்ற கேள்வியெழுப்பப்படுகிறது.
-
Incoming Passenger அட்டையை டிஜிட்டல் முறையில் நிரப்பும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ள Qantas!
23/10/2024 Duração: 02minஆஸ்திரேலியாவிற்கு விமானம் அல்லது கப்பலில் வருபவர்கள், தமது தங்குமிடம் மற்றும் நாட்டிற்கு என்ன பொருட்களை கொண்டு வந்துள்ளனர் என்பதை தெரிவிக்கும், Incoming Passenger Card உள்வரும் பயணிகள் அட்டையை டிஜிட்டல் முறையில் நிரப்பும் வசதியை பரீட்சித்துப் பார்க்கும் நடவடிக்கையை Qantas நிறுவனம் ஆரம்பித்துள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
இனப்படுகொலைக்கு மன்னர் உடந்தை என்று மன்னர் முன்னால் செனட்டர் Thorpe கூச்சலிட்டது சரியா?
23/10/2024 Duração: 07minஆஸ்திரேலியா வருகை தந்த மன்னர் சார்லஸுக்கு எதிராக பூர்வீக மக்கள் பின்னணி கொண்ட செனட்டர் லிடியா தோர்ப் கூச்சலிட்டது உலகளாவிய தலைப்புச் செய்தியாக மாறியுள்ளது. இதனையடுத்து செனட்டர் லிடியா தோர்ப் நடந்துகொண்ட முறை சரிதானா என்ற விவாதம் நாட்டில் எழுந்துள்ளது. இது குறித்த விவரணம். ஆங்கில மூலம் SBS-Newsக்காக Anna Henderson மற்றும் Sophie Bennett. தமிழில் முன்வைப்பவர்: றைசெல்.
-
மெல்பனில் அகதிகள் பேரணிக்கு இடையூறு விளைவித்த Neo-Nazis குழு!
23/10/2024 Duração: 05minஆஸ்திரேலியாவில் வாழும் சுமார் பத்தாயிரம் புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் அகதிகளுக்கு நிரந்தர விசா வழங்கவேண்டும் என்று கோரி பல மாநிலங்களில் புகலிடக் கோரிக்கையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பின்னணியில் மெல்பனில் நடைபெற்ற போராட்டம் நேற்று அக்டோபர் 22ம் திகதியுடன் 100 நாட்களை எட்டியிருந்தது. இதையொட்டி நேற்று மெல்பன் நகரில் இடம்பெற்ற மாபெரும் பேரணியில் நியோ நாசிக்கள் குழுவொன்று குழப்பம் விளைவித்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதுதொடர்பில் தமிழ் ஏதிலிகள் கழகத்தின் பேச்சாளரான ரதி அவர்களின் கருத்துக்களுடன் விவரணமொன்றை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.
-
இரண்டு குழந்தைகளுடன் நீரில் மூழ்கிய சிட்னி பெண்: நடந்தது என்ன?
23/10/2024 Duração: 07minசிட்னியில் வியட்நாமியப் பின்னணிகொண்ட ஒரு இளம் தாயும் அவரது இரண்டு குழந்தைகளும் Georges ஆற்றில் மூழ்கி மரணமடைந்துள்ள சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இச்செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
QLD தேர்தல்: நான்கு ஆண்டுத் திட்டங்கள் தொடர்பில் இறுதி விவாதம்
22/10/2024 Duração: 02minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 23/10/2024) செய்திகள். வாசித்தவர்:மகேஸ்வரன் பிரபாகரன்.
-
‘திராவிட நல் திருநாடும்’: தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை
22/10/2024 Duração: 12minதமிழ்நாட்டில் "தமிழ்த்தாய் வாழ்த்து" தொடர்பான சர்ச்சை தமிழக அரசியலில் ‘ஆரியம், இந்தி, சமஸ்கிருதம்’ என பெரும் கருத்துப்போரை நிகழ்த்தி ஓய்ந்திருக்கிறது. இது தொடர்பான ஒரு விரிவான தொகுப்பை முன்வைத்திருக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
-
மெல்பனில் அகதிகள் மேற்கொண்ட போராட்டம் 100 நாட்களை எட்டியது!
22/10/2024 Duração: 10minஆஸ்திரேலியாவில் வாழும் சுமார் பத்தாயிரம் புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் அகதிகளுக்கு நிரந்தர விசா வழங்கவேண்டும் என்று கோரி பல மாநிலங்களில் புகலிடக் கோரிக்கையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இந்த பின்னணியில் மெல்பனில் நடைபெற்றுவரும் போராட்டம் இன்றுடன்(22/10/24) 100 நாட்களை எட்டியுள்ளது. 24x7 என்ற அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட போராட்டம் இத்துடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு வாரத்திற்கு ஒரு தடவை என்பதாக இது மாற்றியமைக்கப்படவுள்ளதாக புகலிடக் கோரிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் தனு அவர்கள் விளக்குகிறார். அவரோடு உரையாடியவர் றேனுகா துரைசிங்கம்.
-
காஸா சூழ்நிலையை எதிர்க்கட்சி அரசியல்மயப்படுத்துவதாக Attorney-General குற்றச்சாட்டு
22/10/2024 Duração: 03minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 22/10/2024) செய்திகள். வாசித்தவர்:றேனுகா துரைசிங்கம்.
-
Palliative care இறுதிக்கால சிகிச்சை என்றால் என்ன? அதனை எவ்வாறு திட்டமிடுவது?
21/10/2024 Duração: 12minPalliative care இறுதிக்கால சிகிச்சை என்றால் என்ன? இந்த சேவையை யாரெல்லாம் எங்கிருந்து பெற்றுக்கொள்ளலாம்? அதற்கான நடைமுறை என்ன? போன்று Palliative care குறித்து பல கேள்விகளுக்கு பதில் தருகிறார் முதியோர் நல வைத்தியர் Dr பூரணி முருகானந்தம் அவர்கள். அவருடன் உரையாடுகிறார் செல்வி.
-
ஆஸ்திரேலியா இந்தியர்களுக்கு வழங்கும் 1000 Working Holiday விசாவுக்கு இரு வாரத்தில் 40,000 விண்ணப்பங்கள்!
21/10/2024 Duração: 01minஆஸ்திரேலியா இந்தியர்களுக்கு ஆயிரம் Working Holiday விசாக்களை இந்த ஆண்டு வழங்க உள்ளது. அதற்கான விண்ணப்பங்கள் அக்டோபர் 01 முதல் பெறப்பட்டுவருகிறது. ஆனால் முதல் இரண்டு வாரங்களிலேயே 1,000 இடங்களுக்கு சுமார் 40,000 இந்தியர்கள் விண்ணப்பித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
Understanding vaccination rules for children in Australia - ஆஸ்திரேலியாவில் குழந்தைகளுக்கான தடுப்பூசி விதிகள் எவை?
21/10/2024 Duração: 08minDid you know that one in five children is at risk of dying from a disease that is now preventable through vaccination? Australia’s vaccination program helps to prevent severe outcomes from many childhood infections. To access family support payments—and in some states, childcare services—your child must be fully immunised according to the national schedule. - உங்கள் பிள்ளைக்கு தடுப்பூசி போடப்படுவதை உறுதிசெய்வது அவரைப் பாதுகாக்கிறது மற்றும் அவரைச் சுற்றியுள்ள அனைவருக்கும் பயனளிக்கிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். உங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடவேண்டியதன் அவசியம் தொடர்பில் Zoe Thomaidou ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்
-
Dr. Raghavi Jayakumar: First Australian Tamil Woman to Win the Rhodes Scholarship - Dr ராகவி ஜெயக்குமார்: Rhodes புலமைப்பரிசில் வென்ற முதல் ஆஸ்திரேலிய தமிழ்ப்பெண்
21/10/2024 Duração: 09minThe Rhodes Scholarship, established in 1902, is the oldest and one of the most prestigious graduate scholarships in the world. Awarded to international postgraduate students at the University of Oxford in England, the scholarship has been granted to around 175 Australians so far. - பட்டதாரிகளுக்கு வழங்கப்படும் புலமைப்பரிசில்களில் மிகவும் பழமையானது Rhodes புலமைப்பரிசில் . இங்கிலாந்திலுள்ள ஒக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் கற்கும் சர்வதேச முதுகலை மாணவர்களுக்கான இந்த விருது 1902ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இதுவரை இந்தப் புலமைப்பரிசில் சுமார் 175 ஆஸ்திரேலியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
-
இந்தியா & தமிழகம்: முக்கிய செய்திகளின் பின்னணி
21/10/2024 Duração: 09minஇந்தியாவில் ஒரே நாளில் 20 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல், இந்திய மீனவர்களை பாதுகாக்க இலங்கையுடன் பேச்சுவார்த்தை நடத்த வழக்கு, தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை மற்றும் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தும் நடிகர் விஜய்யின் தவெக மாநாடு போன்ற செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!
-
மன்னராட்சி தேவையா என்ற கேள்வி வலுப்பெறுகிறதா?
21/10/2024 Duração: 09minமன்னர் மூன்றாவது Charlesஉம் அவர் மனைவி, இராணி Camilla அவர்களும் தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்கள்.
-
மன்னர் சாள்ஸ் மற்றும் ராணி கமீலா இன்று கன்பரா செல்கின்றனர்!
21/10/2024 Duração: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 21/10/2024) செய்திகள். வாசித்தவர்:றேனுகா துரைசிங்கம்.
-
இந்த வார முக்கிய செய்திகள்
19/10/2024 Duração: 05minஇந்த வார முக்கிய செய்திகள்: 19 அக்டோபர் 2024 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல்
-
நோபல் பரிசுகள் 2024: யாருக்கு? ஏன்?
18/10/2024 Duração: 12minஉலகில் 2024ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மருத்துவம், பௌதிகம்/இயற்பியல், இரசாயனம், பொருளாதாரம், இலக்கியம், அமைதி துறைகளில் நோபெல் பரிசு பெறுகின்றவர்களையும், அதற்கான காரணங்களையும் விளக்குகிறார் பல ஆண்டுகளாக ஊடகத்துறையில் பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.
-
Ashvini Ambihaipahar: The Tamil woman to win elections again - அஷ்வினி அம்பிகைபாகர்: தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்ற தமிழ்ப்பெண்
18/10/2024 Duração: 06minIn the recent local government elections in New South Wales, 17 Tamil candidates participated. Among them, Ashvini Ambihaipahar emerged victorious as a Labor Party candidate in the Mortdale Ward of the Georges River constituency, securing a safe win. - அண்மையில் NSW மாநிலத்தில் நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் 17 தமிழ் வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள். அதில், Georges River தொகுதி Mortdale Ward பகுதியில் Labor கட்சி வேட்பாளராகப் போட்டியிட்ட அஷ்வினி அம்பிகைபாகர் அமோக வெற்றி பெற்றுள்ளார்.
-
Indu Balachandran: A Tamil woman achieving victory in her maiden Election - இந்து பாலச்சந்திரன்: அரசியலில் குதித்த உடனேயே தேர்தலில் வெற்றிபெற்ற தமிழ்ப்பெண்
18/10/2024 Duração: 10minIn the recent local government elections in New South Wales, 17 Tamil candidates participated. Among them, Indu Balachandran, an independent candidate in the Ku-ring-gai constituency’s Gordon Ward, celebrated a remarkable victory in her first election. - அண்மையில் NSW மாநிலத்தில் நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் 17 தமிழ் வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள். அதில், Ku-ring-gai தொகுதி Gordon Ward பகுதியில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்ட இந்து பாலச்சந்திரன் அரசியலில் இப்போதுதான் ஈடுபட ஆரம்பித்துள்ளார்.